bgcolor="#f2f2f2" style="line-height:40%;" colSpan=2
Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

தமிழ்நாட்டில் உள்ள குளிர் சாதன சேமிப்பு வசதிகள்new

குளிர் சாதன சேமிப்பு

உலக அளவில் இந்தியாவானது பழங்கள் உற்பத்தியில் முதலிடத்திலும், காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. இருந்தாலும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் கிடைக்கக்கூடிய அளவு குறைவாகவே இருக்கிறது. ஏனெனில் அறுவடைக்குப் பின் 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரையிலான உற்பத்தியில் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர தரமுடைய உற்பத்திப் பொருட்களானது விநியோகர்களிடம் சேர்வதற்குள் அழுகி / கெட்டு வருகின்றன. இது மட்டும் அல்லாமல் அழுகத்தக்க நிலையில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்யும் போது பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த அழுகத்தக்க பொருட்களினால் வியாபாரத்தில் அதிக செலவு, வியாபாரத் தேக்கம், விலையில் ஏற்றம் இறக்கம் (வேறுபாடு) மற்றும் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறைந்த தட்ப வெப்பநிலையில்  அழுகக்கூடிய தன்மையானது குறைந்தும், தரமான உயர்ந்தும் இருக்கும். இதற்கு குளிர் பதன சேமிப்புக் கிடங்கு அல்லது குளிர் சாதனப்பெட்டி மிக முக்கியமாகும்.

முதல் குளிர் பதன சேமிப்பானது 1892ல் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. எனினும் சுதந்திரத்திற்கு பிறகு தான் குளிர் பதனச் சேமிப்பு தொழிலானது விரிவுபடுத்தப்பட்டது. வேளாணி்மை மந்திரலை, இந்திய அரசாங்கத்தால் பிரபிக்கப்பட்ட குளிர்பதனச் சேமிப்பு ஆணை 1964ன் படி குளிர் பதன சேமிப்புக்கான சரியான நிலைமையும், தொழில் மேம்பாட்டிற்கும் வழி வகுக்கிறது. இந்த ஆணையானது இன்றியமையாத வர்த்தகப் பொருட்களின் ஆணையின் 1955யின் பகுதி 3ன் கீழ் செயல்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் வேளாண்மை விற்பனை ஆலோசகர்கள், குளிர் பதனச் சேமிப்புக்கிடங்கு அமைப்பதற்கான அத்தாட்சி அலுவலர்களாகவும் செயல்படுகின்றனர். விற்பனையின் நிலையற்ற நிலை (அபாயத்தினை) முற்றிலுமாக நீக்கி, இலாபத்தினை அடைவதற்கு குளிர்ப் பதன சேமிப்பு உதவுகிறது.

இந்தியாவின் குளிர்ப்பதன சேமிப்பின் நிலைமை மற்றும் இதன் உள்நிலை ஆற்றல்
நாட்டின் பழங்கள் மற்றும் காய்கறிகளின் வருடாந்திர உற்பத்தியானது 130 மில்லியன் டன்னுக்கு மேல் உள்ளது. இந்தக் கணக்கீடுகள் வேளாண்மை வெளியீட்டு பொருட்களின் 18 சதவிகிதம் ஆகும். வேளாண் காலநிலையின் தன்மை மற்றும் கிடைக்கக்கூடிய சாகுபடி தொகுப்புக்களை பொருத்து உற்பத்தியை படிப்படியாக உயர்த்தலாம். இருந்தாலும் குளிர் பதனச் சேமிப்பு மற்றும் குளிர் சாதன வசதிகள் போன்றவை இல்லாமல் இருக்கும் போது உற்பத்தியின் உள்நிலை ஆற்றலானது பாதிக்கப்படும் ஆனால் இப்பொழுது உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, மாதுளை, பூக்கள் போன்ற வர்த்தகப் பொருட்களுக்கு குளிர்ப் பதன சேமிப்பு வசதிகள் உள்ளது.

உணவுகள் சேமிப்பு மற்றும் அதன் நிலைமை
குறைந்த தட்பவெப்பநிலையில் உணவுகள் மற்றும் மற்ற வர்த்தகப் பொருட்களை சேமிப்புக் கிடங்கில் பதனப்படுத்தும் போது, நுண்ணுயிர்களின் வளர்ச்சியானது குறைக்கப்படுகிறது. நுண்ணுயிர்களானது ஒரு வகை அழிக்கக்கூடிய முகவராகும் மற்றும் பாக்டீரியா, ஈஸ்ட்ஸ் பூசணம் போன்றவற்றையும் உள்ளடக்கியது. இந்த வகை முகவர்களை குறைந்த தட்பவெப்பநிலையில் அழிக்க முடியாது, ஆனால் இதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்தலாம். இதனால் அழுகும் நிலையில் உள்ளப் பொருட்களை பாதுகாக்க குறைந்த தட்ப வெப்பநிலையானது ஏற்றதாக இருக்கும். குறைந்த தட்பவெப்பநிலையில் பதனப்படுத்தும் முறையானது குறைந்த அல்லது அதிகக் குறைபாடு மற்றும்  பொருட்களின் வகையின் அடிப்படையில் சேமிப்பு கால அளவைப் பொருத்தது.

பொதுவாக, மூன்று விதமான உற்பத்திப் பொருள் குழுக்கள் உள்ளது.

  1. சேமிப்பு, பகிர்மானம் மற்றும் விநியோகத்தினை உள்ளடக்கிய உயிருள்ள உணவு வகைகள் (எ.கா) பழங்கள் மற்றும் காய்கறிகள்.
  2. உயிரற்ற உணவு வகைகள் மற்றும் இதன் பதனப்படுத்தும் தொழில்துறைகள் (எ.கா) இறைச்சி மற்றும் மீன் பொருட்கள் மற்றும்
  3. கட்டுப்படுத்திய வெப்பநிலையில் சேமித்து வைக்கப்படும். வர்த்தகப் பொருட்கள் (எ.கா) பீர், புகையிலை, கன்சாரி பழங்கள் மற்றும் காய்கறிகள், நுண்ணுயிர்களின் செயற்பாடுகளை இயற்கையாக எதிர்க்கும் திறன் கொண்டது. பழங்கள் மற்றும் காய்கறிகளை, பதனப்படுத்துதல் என்ற சிறந்த முறையின் மூலம் பாதுகாப்பதன் மூலம் பழங்கள் மற்றும் காய்கறிகள் புத்துணர்வுடனும், பழமாகுதல் அல்லது வளர்ச்சியை குறைக்கும் நொதித்தலை கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.
  4. உயிரற்ற உணவுப் பொருட்களை பதனப்படுத்துவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். ஏனெனில் பதனப்படுத்தும் போது கெட்டு விடுகின்றது. இந்த அழுகக்கூடிய பொருட்களின்  இறந்த திசுக்களை பதனப்படுத்துவது பிரச்சனையாகும்.  நீண்ட கால சேமிப்புக்களான இறைச்சி மற்றும் மீன் பொருட்களானது உறைய வைப்பதில் பயன்பெறுகின்றனர். சேமிப்பின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தினை மிக கவனத்துடன் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு பரிந்துரை செய்யவேண்டும்.
  5. ஆப்பிள், தக்காளி, ஆரஞ்சு மற்றும் பல பொருட்கழள உறையக்கூடிய நிலையில் வைக்க முடியாது. ஆனால் நீண்ட கால சேமிப்பின் போது, கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் வைப்பது மிக அவசியமாகும். சில பொருட்களானது, கட்டுப்படுத்தப்பட்ட வளிமண்டலம் / சூழ்நிலையிலும் மற்றும் மாறுபாட்டினை உடைய சூழ்நிலை நிலையிலும் சேமிப்பதன் மூலம் பயன்பெறுகின்றது.
  6. பால் பொருட்களானது விலங்குகளின் கொழுப்பில் இருந்து பெறப்படுவதால், இதனை உயிரற்ற உணவுப் பொருட்கள் ஆகும். இந்தப் பொருட்களானது ஆக்ஸிஜனேற்றத்தால் பாதிக்கப்பட்டு கொழுப்புக்களானது பழுதடைந்து துர்நாற்றமானது வருகின்றது. காற்றினைத் தவிர்த்து பொருட்களை தொகுப்பதன் மூலம் உணவுப் பொருட்களின் சேமிப்பு நன்மையானது விரிவடைகிறது.

தொழில்நுட்பம்
வர்த்தகப் பொருட்களானது அறை வெப்பநிலையில் குளிர் சாதன சேமிப்புக் கிடங்கின் குளிர்ப் பதன  பெட்டியில் வைத்து சேமிக்கப்படுகின்றது. குளிர் சாதனப் பெட்டியின் அமைப்பானது கொள்கைகளைக் கொண்டது.

  1. நீராவி உட்கிரகிக்கும் முறை (VAS) மற்றும்
  2. நீராவ உட்அழுத்த முறை (VCS)

நீராவி உட்கிரகிக்கும் முறை(VAS)
மற்றவை உடன் ஒப்பிடும் போது இதன் விலை அதிகமாகும். இதன் செயல்பணித்துறையின் பொருளாதாரமானது சிக்கனமாகவும், அதிக முதலீடுக்கு தகுந்த ஈடுபாடு உடையதாகவும் இருக்கிறது. செயல் பணித்துறை மற்றும் ஆற்றலின் எந்த வித இழப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு இந்த முறையானது தேர்வு செய்யப்படுகிறது. எனினும் வெப்பநிலையானது  100 டிகிரி செல்சியஸிற்கு கீழே இருக்கும் போது இதற்கென வரையறுக்கப்பட்ட விளிம்பைக் கொண்டுள்ளது. மேலும் விதைகள், மா போன்றவற்றைத் தவிர பல பழங்கள் மற்றும் காய்கறிகள், 100 டிகிரி செல்சியஸ் வெப்பிநிலைக்கு கீழே நீண்ட கால சேமிப்பின் அடிப்படையில் சேமித்து வைக்கப்படுகின்றது.

நீராவி உட்அழுத்த முறை (VCS)
VAS உடன் ஒப்பிடும் போது இதன் விலையானது குறைவாகும். குளிர்விக்கும் தன்மையைப் பொருத்து குளிர்ப்பதன அறையானது விரவிய வகை (diffuser type), தொட்டி வகை (fin coil type) போன்ற மூன்று வகையான விலை மதிப்பாகவும், சேமிப்பு அறையின் உயரமானது சிறியதாகவும் இருக்கும்.

செயல்பணிச்செயலின் செலவும் அதிகமானதாக இருக்கும். தொட்டி வகை சேமிப்பானது மலிவானதாகவும், சேமிப்பு அறையின் உயரமானது 11.5 மீட்டருக்குள் இருக்கும். இதன் செயல்பணிச் செயலின் செலவானது குறைவாக இருக்கும். சுருள் வளைய சேமிப்பானது, தொட்டி வகையை விட 5 சதவிகிதம் விலை அதிகமாக இருக்கும். இது ஆற்றல் மிக்கதாகவும், செயல்பணிச்செயலின் செலவானது குறைவாகவும் மற்றும் அதிக இடத்தினைக் கொண்ட சேமிப்பு கிடங்காகவும் உள்ளது. இந்த வகையின் சேமிப்பு அறையின் உயரமானது 5.4 மீட்டர் முதல் பயன்படுத்தப்படுகிறது. குளிர் சாதனப் பெட்டியின் அமைப்பானது, குறைந்த வெப்ப நிலையில் நீராவியாக்குதல் மூலம் ஏற்படும் வெப்பம், சேமிப்புக் கிடங்கின் இடத்தினால் ஏற்படும் அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலையில் ஆவியாக்குதலால் ஏற்படும் அழுத்தம் மற்றும் ஆவியாக்கும் சாதனத்தின் அழுத்தம் போன்றவையாகும்.

குளிர்ப்பதனச்  சேமிப்பு வடிவமைப்புகளின் வெப்பமடையும் இயல்புகள்

  1. வெப்பம் கடத்துதல் மூலம் வெப்பமடையும் சுவர், தளம் மற்றும் கூரைப்பக்கம் / கூரை மேற்பகுதி.
  2. சூரியக் கதிர்வீச்சினால் வெப்படையும் சுவர் மற்றும் கூரை மேல்பகுதி.
  3. காற்று செறிவூட்டுதல்  மூலம் தொடர்ச்சியாக திறக்கப்படும் கதவினால் உட்புகும் காற்று.
  4. சேமித்து வைத்தப் பொருட்களில் இருந்து வெளிவரும் வெப்பம்
  5. வேலை செய்யும் அறையில் உள்ள வேலையாட்களிடம் இருந்து வரும் வெப்பம்.
  6. குளிர் விசிறி
  7. ஒளி
  8. முதிர்வடைந்த கருவி
  9. வருகின்ற பொருட்களை ஏற்றுதல்
  10. இதரப் பொருட்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகளின் குளிர்ப் பதனச் சேமிப்பு கிடங்கின் சேமிப்புச் சூழ்நிலை

வர்த்தகப் பொருட்கள்

வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ்

ஒப்பு ஈரப்பதம் (சதவீதம்)

ஆப்பிள்

1-8

90-98

சர்க்கரைப்பேரி

0.5-0

90-95

ஆனைக்கொய்யா (avacado)

7-13

85-90

ஆஸ்பராகஸ் (கண்ணீர் விட்டான் கிழங்கு)

0-2

95-97

அவரை

4-7

90-95

பீட்ரூட்

0-2

95-97

ஃப்ராகோவி

0-2

90-95

நாவல்பழம்

0.5-0

95-97

கேரட்

0-2

90-95

காலிஃபிளவர்

0-2

90-95

செர்ரி

0.8-0

90-95

வெள்ளரி

7-10

90-95

கத்தரி

0-2

90-95

திராட்சை

1-1

85-90

நார்த்தங்காய்

4-15

86-88

கீரை

0-1

95-98

எலுமிச்சை

3-10

85-90

மா

11-18

85-90

நீர்முலாம் / தர்பூசணி

2-4

85-90

ஆரஞ்சு

0-10

85-90

குழிப்பேரி

1-1

88-92

உருளைக்கிழங்கு

1.5-4

90-94

குளிர் சாதன சேமிப்பு அலகுகளின் பட்டியல்

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015